search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவிகள் போராட்டம்"

    பஞ்சாப்பில் அகல் பல்கலைக்கழகத்தில் 12 மாணவிகளின் ஆடைகளை களைந்த விடுதி பெண் வார்டன்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். #PunjabStudents
    பதிந்தா:

    பஞ்சாப் மாநிலம் பதிந்தா மாவட்டம் தல்லன்டிசபோ என்ற இடத்தில் அகல் பல்கலைக்கழகம் உள்ளது. இங்குள்ள விடுதியில் ஏராளமான மாணவிகள் தங்கி படித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் விடுதியில் உள்ள கழிவறையில் சானட்ரி நாப்கின்கள் கிடந்தது. இதை பார்த்து 2 விடுதி பெண் வார்டன்கள் மாணவிகளிடம் கழிவறையில் யார் சானட்ரி நாப்கின்களை வீசினீர்கள் என்று கேட்டனர். ஆனால் மாணவிகள் யாரும் பதில் கூறவில்லை.

    இதையடுத்து சானட்ரியை பயன்படுத்தியது யார்? என்று கண்டுபிடிப்பதற்காக மாணவிகளின் ஆடைகளை களைய முடிவு செய்தனர். 2 பெண் பாதுகாவலர்கள் மூலம் 12 மாணவிகளின் ஆடைகளை களைந்து சோதனை செய்தனர்.

    இந்த விவகாரம் குறித்து மாணவிகள் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் புகார் செய்தனர்.

    ஆனால் அதுபற்றி பல்கலைக்கழக நிர்வாகிகள் கண்டு கொள்ளவில்லை. பெண் வார்டன்கள், பெண் பாதுகாவலர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதையடுத்து மாணவ- மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மாணவர்கள் கூறும்போது, பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள்-மாணவிகள் பேசிக்கொள்ளக் கூட அனுமதிப்பதில்லை என்றும் குற்றம் சாட்டினர்.

    போராட்டம் நடத்திய மாணவர்களை பல்கலைக்கழக நிர்வாகிகள் சமாதானப்படுத்தினர். பல்கலைக்கழக டீன் ஜோஹல் கூறும்போது, மாணவிகளிடம் அநாகரீகமாக நடந்த 2 பெண் வார்டன்கள், 2 பெண் பாதுகாவலர்கள் நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர் என்றார். #PunjabStudents
    தனியார் கல்லூரியில் பயிலும் மாணவிகள் பொள்ளாச்சி சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் வைத்து கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். #pollachiissue
    புதுக்கோட்டை:

    பொள்ளாச்சியில் இளம் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தமிழகம் மட்டும் இல்லாமல் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பல்வேறு கட்சியினர், அமைப்புகள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகிறது. 

    இதேபோல புதுக்கோட்டையில் இருந்து மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் பயிலும் மாணவிகள் பொள்ளாச்சி சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெண் வன்கொடுமைக்கு உச்சபட்ச கொடூர (மரண) தண்டனை அமல்படுத்து, அதுவரை தேர்தலை ரத்துசெய். பெண்டீரே விழித்தெழுங்கள் உன்னை சிதைப்பவனின் பிறப்புறுப்புகளை அறுத்தெறியுங்கள், என்பது உள்பட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் வைத்து கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    இது குறித்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் நேற்று சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் வலம்வந்ததால், புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. #pollachiissue
    தஞ்சையில் ஜாக்டோ ஜியோவுக்கு ஆதரவாக கல்லூரி மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். #Jactogeo
    தஞ்சாவூர்:

    பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்பன உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடந்த 22-ந் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஜாக்டோ ஜியோவுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

    தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு பெண்கள் கல்லூரியில் படிக்கும் மாணவிகள் 500-க்கும் மேற்பட்டோர் இன்று காலை கல்லூரிக்கு வந்தனர். பின்னர் அவர்கள் வகுப்புகளுக்கு செல்லாமல் புறக்கணித்தனர்.

    இதையடுத்து கல்லூரி முன்பு திரண்டு நின்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய மாணவர் சங்க தஞ்சை மாவட்ட செயலாளர் அரவிந்த்சாமி, கிளை செயலாளர் சோபியா ஆகியோர் தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் அருண்குமார் முன்னிலை வகித்தார்.

    ஆர்ப்பாட்டத்தின்போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும், கைது செய்யப்பட்ட அரசு ஊழியர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் 500 மாணவிகள் கலந்து கொண்டனர். #Jactogeo
    கோவில்பட்டி அரசு பள்ளியில் 3 ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதை கண்டித்து மாணவிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    கோவில்பட்டி:

    தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் கண்டறியப்பட்டு அத்தகைய ஆசிரியர்கள் பிற பள்ளிகளுக்கு கவுன்சிலிங் மூலம் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கோவில்பட்டி அரசு பள்ளியில் 3 ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டார்கள்.

    இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவிகள் 3 ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர். இதைத் தொடர்ந்து மாணவிகள் அனைவரும் வகுப்புகளை புறக்கணித்து வெளியில் வந்தார்கள்.

    பள்ளி வளாகத்தில் தரையில் அமர்ந்த அவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் கல்வித்துறை அதிகாரிகள் வந்து மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    ×